![]() |
பெங்களூரில் உள்ள ஓர் பள்ளியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1954 முதல் 1959 வரை கல்வி கற்றார். இந்த பள்ளியில் தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.![]() வகுப்பறையில் மின்சார வசதி கிடையாது, குடி தண்ணீர் குழாய் உடைந்துள்ளது, கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை.இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனிடையே இப்பள்ளியின் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக மாநில சேவா சமிதி கோரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டுமானப்பணிகள் தொடங்கியவுடன் இந்த தொகையை அனுப்பி வைப்பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார். |
சனி, 31 டிசம்பர், 2011
தான் படித்த பள்ளியை சீரமைக்க நன்கொடை அளித்துள்ள ரஜினி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக