புதன், 21 டிசம்பர், 2011

பில்லா-2 படத்தில் நடிக்கும் பாலிவுட் அழகி


தமிழ் திரையுலகில் தல அஜீத் நடித்து வருகிற பில்லா-2 திரைப்படத்தில் பாலிவுட் அழகி ப்ருனா அப்துல்லா நடிக்கிறார்.
இதுபற்றி ப்ருனா அப்துல்லா கூறியதாவது, நான் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, கொலிவுட்டில் நடிக்க மிகவும் ஆவலாக இருந்தேன்.
வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் கொலிவுட் கலைஞர்கள் பணியாற்றுவதை கண்டு வியந்துள்ளேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
அஜித் அவர்களின் குணங்கள் என்னை கவர்ந்துள்ளது. தமிழ் திரையுலகில் அழகான நாயகனோடு இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பில்லா-2 திரைப்படத்தில் கவர்ச்சியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் வரும் காட்சிகளில் நடிக்க எனக்கு படக்குழுவினர் பயிற்சி அளித்துள்ளார்கள்.
இயக்குனர் ஷக்ரி கற்பனை வளத்தோடு பில்லா-2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். எதையும் செய்வதற்கு முன்பு வெளியே சொல்ல மாட்டார். அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக