சனி, 17 டிசம்பர், 2011

விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா


ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்க்கு போட்டியாக விளங்கும் சூர்யா விஜய்யை முந்திக் கொண்டிருக்கிறார்.
மாற்றான் பட சம்பளத்துடன் சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூர்யா, தனது கணக்குப்படி பார்த்தால் கூட பதினெட்டு கோடி ரூபாய் சம்பளத்தை கிராஸ் செய்துவிட்டார். இந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.
ஒவ்வொரு முறையும் முதலில் விஜய்யிடம் சொல்லப்பட்ட சில கதைகளில் நடித்துதான் இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறாராம் சூர்யா.
இவர்களது தற்போதைய போட்டி டெலிவிஷன் கேம் ஷோ. முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாக தான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம்.
ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா.
மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார், பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார்கள்.
பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக