தற்போது இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும் புதிய படத்துக்கான வேலைகளில் இறங்கப் போகிறாராம் கமல்ஹாசன். கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளை கேட்டு வருகிறார்கமலிடம் தற்போது இரு இயக்குனர்களின் ஸ்கிரிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் என இரு இயக்குனர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த இருவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிரிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம். எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம். அதே நேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம். எப்படியெனில் ஒரு தயாரிப்பாளாராக ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.  | 
வெள்ளி, 23 டிசம்பர், 2011
ஷங்கர் இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கவிருக்கும் புதிய படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளை கேட்டு வருகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக