![]() |
தமிழ் திரையுலகில் மதுரையை வைத்து நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றாலும் புதுமுகங்கள் நடித்துள்ள உன்னதமானவன் திரைப்படம் வெற்றியடையும் என்ற எதிர்ப்பார்ப்பு கொலிவுட்டில் எழுந்துள்ளது.![]() உன்னதமானவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை கதாநாயகி காதலிக்கிறாள். அவளுடைய காதல் வெற்றி அடைந்ததா? நாயகன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான் என்ற விடயங்களே படத்தின் திரைக்கதையாகும். இத்திரைப்படத்தின் கதாநாயகனான பிரபா மனநலம் பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்காக 3 மாதங்கள் தாடி வளர்த்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மதுரை மாவட்டம் சின்னாலம் பட்டியின் நடந்த திருவிழா படப்பிடிப்பின் போது கிழிந்த சட்டையுடன் நடித்துக்கொண்டிருந்த கதாநாயகன் இளைப்பாற கோயிலில் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மக்கள் உண்மையான பைத்தியக்காரன் என்று நினைத்து நாயகனுக்கு காசு போட்டுள்ளனர். இந்த விடயத்தை நாயகன் இயக்குனரிடம் சொல்ல, இயக்குனர் இது கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டியுள்ளார். ![]() ![]() ![]() ![]() |
வியாழன், 29 டிசம்பர், 2011
உன்னதமானவன் திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக