திங்கள், 19 டிசம்பர், 2011

பாலிவுட் நடிகை மினிஷா லம்பாவுக்கு சுங்க வரித்துறை அபராதம் விதித்தது


பிரபல மாடல் அழகி மினிஷா லம்பாவுக்கு சுங்க வரித்துறை ரூ.4.5 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.
பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான மினிஷா லம்பா கடந்த மே மாதம் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச படவிழாவில் கலந்து கொண்டு பிரபல நகை தயாரிப்பு நிறுவனத்தின் நகைகளை அணிந்து கொண்டு மாடலாக வந்துள்ளார்.
இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் நடிகை மினிஷா லம்பாவிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் நகைகளுக்கு சுங்கவரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர விலை உயர்ந்த பைகள், செருப்புகள், கண்ணாடிகள் உட்பட பொருட்களையும் எடுத்து வந்திருந்தார்.
இவை அனைத்தும் வரி செலுத்தும் இனங்கள் என்று அதிகாரிகள் அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இந்த நகைகளை எடுத்து வருவது பற்றிய ரசீது குறிப்புகளும் அவரிடம் இல்லாததையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்தனர்.
நடிகை மினிஷா லம்பா கூறுகையில், பட விழாவில் காட்சிக்காக அணிந்த நகைகளைத்தான் எடுத்து வந்தேன். நகை விவரங்கள் அடங்கிய கடிதத்தை பிரான்ஸில் தங்கி இருந்தபோது தவற விட்டு விட்டேன் என்றார். அவர் சார்பில் அவருடைய சட்டத்தரனி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முடிவில் நடிகை மினிஷா எடுத்து வந்த நகைகளுக்கு அபராதமாக ரூ.3 லட்சம், அவற்றுக்கான சுங்க வரி கட்டணமாக ரூ.95 ஆயிரம், மற்ற பொருள்களுக்கான சுங்கவரி ரூ.10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று சுங்க இலாகா ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக