செவ்வாய், 27 டிசம்பர், 2011

வழி விடு கண்ணே வழி விடு திரைப்படத்தின் அறிமுக நாயகி


தமிழ் திரையுலகில் வழி விடு கண்ணே வழி விடு, தாயை மதிக்காதவரின் எதிர் காலத்தைப் பற்றிய திரைப்படம் ஆகும்.
தமிழ் திரையுலகில் எம்.ஜி.எஸ். புரடக்சன்ஸ் தயாரித்துள்ள 'வழி விடு கண்ணே வழி விடு' திரைப்படம், ஊடகத்தினருக்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பரில் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் நாயகனாக தமிழ், நாயகியாக மதுஸ்ரீ இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் பூவிலங்கு மோகன், ஆடுகளம் மேரி, சார்லி, பாண்டு, காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
நாயகன் தமிழ், நாயகி மதுஸ்ரீ இருவரும் காதலிக்கிறார்கள். நாயகனின் அம்மாவின் முகத்தை கண்டு நாயகி மிரள்கிறார். இதனால்,நாயகனோடு இணைந்து வாழ தயக்கம் காட்டுகிறார்.
இதனால் தன் அம்மாவை நாயகன் ஒதுக்குகிறான். ஆனால் தன் அம்மாவை இறுதியில் பார்க்க வரும் போது என்ன நடக்கிறது என்பதை உருக்கமாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
வழி விடு கண்ணே வழி விடு திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் கெளரிஷங்கர். மேலும் படத்திற்காக அலிகான், இசை-உத்திரியன், ஒளிப்பதிவு-கனகராஜ், படத்தொகுப்பு-ராஜ்கீர்த்தி, நடனம்-நீபா, வாமன் மாலினி, தினா, ராபர்ட், பாடல்கள்-கெளரிஷங்கர், யுகபாரதி, ஆக்ஸன்-மின்னல் முருகன், பி.ஆர்.ஒ.-செல்வரகு மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக