![]() |
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள நான் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் ஜீவா ஷங்கர். இவர் மறைந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் ஆவார்.![]() ஒரு இளைஞன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரச்சினை புயலை எதிர் கொள்கிறான் என்பதே இந்த 'நான்' திரைப்படம். இதில் நான் இசையமைப்பதொடு முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறேன். என்னுடன் ஆனந்த தாண்டவம் திரைப்படத்தில் நடித்த சித்தார்த், ரூபா மஞ்சரி, அனுயா, விபா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். திரைப்படத்தின் பாடல்களுக்கு புது வடிவம் கொடுக்க வெளிநாட்டிலிருந்து இசை வல்லுனர்கள், தொழில் நுட்பக்கலைஞர்களை வரவழைத்து பாடல்களை உருவாக்கியுள்ளேன். புதிய கவிஞருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியில் இறங்கியுள்ளேன். பாடலுக்கான மெட்டை இணைய தளத்தில் வெளியிடுகிறேன். உலகின் எந்த மூலையில் உள்ள கவிஞரும் அந்த மெட்டை கேட்டு, அதற்க்கேற்ற வரிகளை எழுதி, அனுப்பலாம் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார். http:// vijayantony.com பாடல் வரிகளை, கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபேக்ஸ் எண்ணுக்கு அனுப்பலாம். vijayantonylyrics@gmail.com fax:+91-44-45542917 இந்த பாடலுக்கான தெரிவு 31-12-2011 அன்று முடிவடைகிறது. இதில் வெற்றிப் பெற்ற பாடலாசிரியர் யார் என்ற விபரம் எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு சனவரி 1,2 ஆகிய திகதிகளில் அறிவிக்கப்படும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார். |
செவ்வாய், 20 டிசம்பர், 2011
புது கவிஞர்களுக்கு சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பளிக்கும் விஜய் ஆண்டனி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக