சனி, 24 டிசம்பர், 2011

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் 3 லட்சம் பரிசு பெற்ற ஆடுகளம் திரைப்படம்


சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வான சன் பிக்சர்ஸின் ‘ஆடுகளம்’ படத்துக்கு ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையில் 9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் திகதி தொடங்கியது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 154 படங்கள் திரையிடப்பட்டன. சிறந்த தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவும் நடைபெற்றது. ரோகிணி உள்ளிட்டவர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த படங்களை தேர்வு செய்தனர்.
இப்பிரிவில் 16 படங்கள் கலந்துகொண்டன. சிறந்த படமாக சன் பிக்சர்ஸின் ‘ஆடுகளம்’ தேர்வானது. 2-வது பரிசை சற்குணம் இயக்கிய ‘வாகை சூடவா’ பெற்றது. ‘ஆடுகளம்’ படத்துக்காக இயக்குனர் வெற்றி மாறனுக்கு ரூ.2 லட்சம், தயாரிப்பாளர் கதிரேசனுக்கு ரூ.1 லட்சம் பரிசை இயக்குனர் கே.பாலசந்தர், ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் வழங்கினர்.
‘வாகை சூடவா’ இயக்குனர் சற்குணம், தயாரிப்பாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசை நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வழங்கினார்.
ஜூரி விருதுக்கு தேர்வான ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் கதை, வசன கர்த்தா பாஸ்கர் சக்தி ரூ.1 லட்சம் பரிசு பெற்றார். மேலும் ‘காவல் தோட்டம்’ தமிழ் நாவலுக்காக சாகித்ய அகடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சு.வெங்கடேசனுக்கு சரத்குமார் ரூ.1 லட்சம் பரிசளித்தார்.
விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், எஸ்.பி.ஜனநாதன், அமீர், பார்த்திபன், ஆதி, நடிகை தன்ஷிகா, சுஹாசினி, ரேவதி, பட அதிபர் ஆனந்தா எல்.சுரேஷ், தங்கராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக