புதன், 21 டிசம்பர், 2011

தெலுங்கு பாடி கார்ட் படத்துக்கு நடனம் அமைத்த காயத்ரி ரகுராம்


தெலுங்கு மொழியில் வெங்கடேஷ்-த்ரிஷா இணைந்து நடிக்கும் பாடி கார்ட்(Body guard) திரைப்படத்திற்கு காயத்ரி ரகுராம் நடனம் அமைத்துள்ளார்.
தெலுங்கு நாயகன் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் தெலுங்கு பாடிகார்ட் திரைப்படத்திற்க்கு காயத்ரி ரகுராம் நடனம் அமைத்துள்ளார்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்து வெற்றி பெற்ற பாடிகார்ட் திரைப்படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் இளைய தளபதி விஜய் நடித்துள்ளார்.
இதையடுத்து பாடிகார்ட் திரைப்படத்தை தெலுங்கிலும் இயக்குகிறார்கள். இந்தப்படத்துக்கு நடனம் அமைக்க காயத்ரி ரகுராம் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத் சென்றுள்ளார்.
இதுபற்றி காயத்ரி ரகுராம், நான் முதன் முறையாக த்ரிஷா-வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் பணியாற்றுகிறேன். நாயகன்-நாயகி இருவரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மென்மையான காதல் பாடலுக்கு பொருத்தமான வகையில் நடன அசைவுகளை கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக