சனி, 17 டிசம்பர், 2011

திரிஷாவுடன் இணையும் விஷால்


தீராத விளையாட்டு பிள்ளை இயக்குனர் திரு மற்றும் பாலாஜி மீடியா இணைந்து இயக்கும் படம் “சமரன்”.
இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகவும், விஷால் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஊட்டி மற்றும் சாலக்குடியில் பதினைந்து நாட்களாக சமரன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்ததுள்ளது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இப்படத்தின் படக்குழுவினர் வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கின்றனர்.
இது பற்றி இப்படத்தின் இயக்குனர் திரு கூறுகையில் வரும் 20ம் திகதி “தாய்லாந்தில்” தொடங்கப்பட்டு ஐம்பது நாட்கள் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்பு “ஐரோப்பா” நாடுகளில் எடுக்கப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதனின் இயற்கையான இயல்புகளை தவிர்த்து சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்னை விஷால் மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
சமரன் படம் “கோடைகால அதிரடி திரில்லர் படமாக” இருக்கும் என விஷால் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக