சனி, 17 டிசம்பர், 2011

தூங்கா நகரம் இயக்குனரின் சிகரம் தொடு திரைப்படம்


தமிழ் திரையுலகில் தூங்கா நகரம் திரைப்படத்தை இயக்கிய கௌரவ், சிகரம் தொடு என்ற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ்(Cloud nine movies) தயாரித்த தூங்கா நகரம் திரைப்படத்தை எழுதி, இயக்கி, நாயகர்களில் ஒருவராக அறிமுகமான இயக்குனர் கெளரவ் சிகரம் தொடு என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
என் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் சென்னை திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவு செய்யப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
திரைப்பட உலகில் பாரம்பரியமிக்க சத்ய ஜோதி படநிறுவனத்தின் தயாரிப்பில் எனது இரண்டாவது படமான சிகரம் தொடுவை இயக்க உள்ளேன்.
இத்திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் பணியாற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கான தெரிவு முடிந்ததும், திரைப்படத்தை இயக்குவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளோம் என்று சிகரம் தொடு இயக்குனர் கெளரவ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக