![]() |
தமிழ் திரையுலகில் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் தருண் கோபி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பேச்சியக்கா மருமகன்.![]() பேச்சியக்கா மருமகன் திரைப்படத்தில் திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றி வருகிற தாஸ் கூறியதாவது, முதலில் திரைப்பட தொகுப்பாளர் ஒரு ரசிகனாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். அப்போது தான் இந்த இடத்தில் இந்தக்காட்சி வரும் என்பதை அறிய முடியும். அப்படி அறிந்தால் தான் ரசிகன் யூகிக்க முடியாத வகையில் காட்சிகளை கோர்க்க முடியும். திரைப்பட தொகுப்பில் இதை“L Cut"என்று கூறுவார்கள். பேச்சியக்கா மருமகன் திரைப்படத்தை தொகுக்கும் போதே வெற்றி திரைப்படம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு திரைப்படம் விறுவிறுப்பாக, அலுப்புத் தட்டாமல் போகிறது என்று ரசிகன் கூறினால் அது தான் திரைப்படத்திற்கான மதிப்பீடு என்று கூறியுள்ளார். |
புதன், 21 டிசம்பர், 2011
பேச்சியக்கா மருமகன் திரைப்படம் வெற்றி பெறும்: திரைப்பட தொகுப்பாளர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக