லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் வேட்டை. இதில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் சமீரா ரெட்டி பேசுகையில் தமிழ் தவிர மலையாளம், பெங்காலி, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறேன்.ஆனால் எந்த மொழியும் எனக்கு சரளமாக பேச வராது. அது எனக்கு பிரச்னை இல்லை. ஏனென்றால் காட்சிக்கு ஏற்ப உணர்ச்சிபாவங்களை சரியாக வெளிப்படுத்திவிடுவேன். இப்படத்தில் அமலா பாலும் நானும் அக்கா, தங்கையாக நடிக்கிறோம். இப்போது நிஜத்திலும் சகோதரிகள் போல ஆகிவிட்டோம். எங்கள் இருவருக்கும் தகராறு என்று கிசுகிசு வருகிறது. அப்படி எதுவும் இல்லை. நடிகர் மாதவன் என்றால் எல்லா பெண்களுக்கும் ஒருவித ஈர்ப்பு உண்டு. அவரை முதல்முறையாக படப்பிடிப்பில் பார்த்தபோது நானும் ஒருவித மயக்கத்துடன் நின்றேன். என்னை அவர் திருமணம்செய்துகொண்டதற்கு நன்றி. இவ்வாறு கூறிவிட்டு சிறிது நேரம் நிறுத்திய சமீரா, ‘சினிமாவில்தான்’ என்று சொல்லி கலகலப்பை ஏற்படுத்தினார். |
புதன், 21 டிசம்பர், 2011
மாதவன் என்னை திருமணம் செய்ததற்கு நன்றி: சமீரா ரெட்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் சமீரா ரெட்டி பேசுகையில் தமிழ் தவிர மலையாளம், பெங்காலி, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக