ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்


ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தில் கௌரவ வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க 3டி அனிமேஷன் படமாக உருவாகிறது கோச்சடையான். இதை ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குகிறார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வை செய்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கௌரவ வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து சவுந்தர்யா கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்று வெளியான தகவல் வதந்தி தான்.
கதாநாயகி யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக