சனி, 17 டிசம்பர், 2011

மம்பட்டியான் பிரஷாந்த் என்று அழைத்த மாஜி மம்பட்டியான்.


தன் மகன் பிரஷாந்தை இனி எல்லோரும் மம்பட்டியான் பிரஷாந்த் என்றே அழைப்பார்கள் என்கிறார் மாஜி நடிகர் தியாகராஜன்.
தடைகள் பல கடந்து வெளியாகின்றது டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கும் “மம்பட்டியான்” திரைப்படம்.
இந்தப் படத்திற்குப்பின் தன் மகன் பிரஷாந்தை இனி எல்லோரும் மம்பட்டியான பிரஷாந்த் என்றே அழைப்பார்கள் என்கிறார் இப்படத்தின் இயக்குநரும் “மாஜி மம்பட்டியானான”  நடிகர் தியாகராஜன்.
இப் படம் பற்றி அவர் கூறுகையில் பிரஷாந்த் இப்படத்தில் மம்பட்டியானாகவே வாழ்ந்திருப்பதாக படம் பார்த்த பலரும் தெரிவிக்கின்றனர்.
படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் வந்திருப்பது படத்தின் வெற்றிக்கு மேலும் பக்கபலமாக அமைந்ததுள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.
“காட்டு வழிப்போற பெண்ணே... கவலைப்படாதே... காட்டுப்புலி வழி மறிக்கும் கலங்கி நிற்காதே... மம்பட்டியான் பெயரைச் சொன்னா புலி ஒதுங்கும் பாரு.. ”எனத் தொடங்கித் பாடலை பழைய மம்பட்டியான் படத்தில் இளையராஜாவின் இசையில் இசைஞானி பாடியிருப்பது போல இப்படத்திலும் பாடியிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
புதிய மம்பட்டியான் படத்தில் தமன் இசையில் ஓர் இடத்தில் தியாகராஜனும், புதுவித ரீ-மிக்ஸில் நடிகர் சிம்புவும் இரண்டு விதமாக பாடி அதில் பிரஷாந்தும் சிம்புவும் ஆடிப்பாடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக