செவ்வாய், 27 டிசம்பர், 2011

என் நாயை பராமரிப்பவர் தான் எனக்கு கணவராக வேண்டும்: ஷெரின்


என் நாயை பராமரிக்கவும், எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும் என நடிகை ஷெரின் கூறியுள்ளார்.
துள்ளுவதோ இளமை பட புகழ் ஷெரீன் அபாயம் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார்.
கொஞ்சகாலத்திற்கு முன் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் "டேன்ஜர்" எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் அபாயமாக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
இது சம்பந்தமான பேட்டியில் ஷெரின் உங்களது காதல் என்னாயிற்று? காதலர் என்ன ஆனார்? என நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு எக்கச்சக்கமான பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள்? என வினவினார்.
என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம் என்றும் கூறினார்.
மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி வெண்ணிலா தான் என்றார்.
அதுவும் பெண் நாய் குட்டி என்றதுடன் அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும்.
மற்றபடி இன, மொழி, மத பாகுபாடெல்லாம் கணவர் விஷயத்தில் பார்க்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக