புதன், 21 டிசம்பர், 2011

ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு தடை


உலக அதிசியமான தாஜ்மகால் அருகில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.
தமிழ் திரையுலகில் சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்த விண்ணத்தாண்டி வருவாயா திரைப்படம் இந்தியில் ‘ஏக் தீவானா தா’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.
இந்த திரைப்படத்தையும் கௌதம் மேனனே இயக்கியுள்ளார். ஒஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஏக் தீவானா தா இசை வெளியீட்டு விழாவை ஆக்ராவில் தாஜ்மகால் பின்னணியோடு அதன் அருகில் நடத்த ஏ.ஆர்.ரகுமான் விரும்பினார். இதற்காக அங்கு மேடை அமைக்கவும் கூட்டத்தினரை கூட்டவும் ஏற்பாடு நடந்தது.
ஆனால் தாஜ்மகால் அருகில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே அங்கு ஒரு இந்தி படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்து படக்குழுவினர் அப்பகுதிகளை சேதப்படுத்தி விட்டதாக புகார் கூறப்பட்டது.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு வரும் கூட்டத்தினராலும் தாஜ்மகாலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம் என அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ‘ஏக் தீவானா தா’ திரைப்படம் காதல் கதையாகும். அதன் இசை வெளியீட்டு விழாவை தாஜ்மகால் அருகில் நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்றே அப்பகுதியை ஏ.ஆர்.ரகுமான் தெரிவு செய்தார்.
தற்போது இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆக்ராவில் உள்ள நட்சத்திர விடுதியில் விழாவை நடத்துகின்றனர். விடுதியிலும் தாஜ்மகால் தெரியும்படி அதன் பின்னணியில் விழா நடக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக