தமிழ் திரையுலகில் விண்ணை தாண்டி வருவாயா, கோ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடேயின் மென்ட்(R.S.infotainment) தலைவர் எல்ரெட் குமார் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்காக கவிதாயினி தாமரை பாடல்களை எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சென்னை சத்யம் திரையரங்கில் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது.இசை குறுந்தகடை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட இயக்குனர் கே.வி.ஆனந்த் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இத்திரைப்படத்தின் “ஒருமுறை” பாடல், சென்னை மற்றும் லாஸ் வெகாஸ் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டு, அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளசுகளின் காதல் வாழ்க்கையை பற்றி முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் கூறியுள்ளோம். இளம் நாயகன் அதர்வா, நாயகி அமலா பால், சந்தானம் மற்றும் பலர் இதில் நடித்துள்ளார்கள் என்று இயக்குனரும், தயாரிப்பாளருமான எல்ரெட் குமார் தெரிவித்துள்ளார். இயக்குனர்கள் கெளதம் மேனன் மற்றும் கே.வி.ஆனந்த் இருவரும் எல்ரெட்குமாரை 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' திரைப்படத்தை இயக்க ஊக்கமளித்துள்ளார்கள் என்பது குறிப்படத்தக்கது. |
திங்கள், 19 டிசம்பர், 2011
முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இத்திரைப்படத்திற்காக கவிதாயினி தாமரை பாடல்களை எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சென்னை சத்யம் திரையரங்கில் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக