செவ்வாய், 27 டிசம்பர், 2011

கதாநாயகன் வாய்ப்பை விமலிடம் இருந்து கைப்பற்றிய விஷ்ணு


தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் இயக்குனர் சீனுராமசாமி தற்போது நீர்ப்பறவைகள் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு முதலில் கதாநாயகனாக பசங்க விமல் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது  கதாநாயகன் வாய்ப்பு நடிகர் விமலிடம் இருந்து நடிகர் விஷ்ணுவிடம் சென்று விட்டதாக தெரிகிறது.
நடிகர் விஷ்ணு வெண்ணிலா கபடிக்குழு,  குள்ளநரி கூட்டம்  ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கதாநாயகிக்கான வேட்டை நடந்து வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்‌க்கலாம்.
ஆனால் விமலுக்குப் பதில் விஷ்ணு ஒப்பந்தமானது மட்டும் விளக்கம் இல்லாமல் இருக்கிறது என்கிறது கொலிவுட் வட்டாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக