சனி, 17 டிசம்பர், 2011

சிம்புவினால் எரிச்சலடைந்த பத்திரிக்கையாளர்கள்


பத்திரிக்கை நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்த சிம்பு, அவர்களை காக்க வைத்து பேட்டி  தராமலேயே திருப்பி அனுப்பிவைத்துள்ளார்.
சிம்பு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஒரு பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரச் சொன்னாராம்.
காலையிலேயே இருவரும் போய்விட்டார்கள், ஆனால் சிம்புவோ எதையும் கண்டுகொள்ளாமல் அரைமணி நேரமாய் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தாராம்.
அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் நேரில் போய் விஷயத்தை புகைப்படக்காரரும் சென்றார்களாம்.
ஆனால் சிம்புவைச் சுற்றி நின்று கொண்டிருந்த அடியாட்கள் உங்களையெல்லாம் யார் உள்ளே விட்டது வெளியே செல்லுங்கள் என்று விரட்டியடித்தார்களாம்.
இதனால் எரிச்சலடைந்த சிம்பு சட்டென்று எழுந்து தனது அறைக்கு போய்விட்டாராம்.
பத்திரிக்கை நிரூபரும் புகைப்படக்காரரும், மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்து பின் புகைப்படமோ, பேட்டியோ தேவையில்லை என எரிச்சலுடன் திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக