![]() |
இன்றளவில் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகன்களில் டாப் ஸ்டார் தனுஷ் தான், இதற்கு காரணம் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் மற்றும் ஆடுகளம் திரைப்படம்.![]() இந்நிலையில் தனுஷ் விடைபெறவிருக்கும் 2011ம் ஆண்டில், தனக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடி தந்தமைக்காக தான் நன்றிக்கடன் பட்டிருக்கும் முதல் 5 நபர்களை குறிப்பிட்டு நன்றியுறையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு: தனுஷின் முதல் மரியாதை அவரது பெற்றோருக்குத் தான், அவர்களது அளப்பறிய அன்பு தான் மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக கூறியுள்ளார். 2வது நன்றி ரசிக பெருமக்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும். மூன்றாவது நன்றி இறைவனுக்கு உரித்தாகுக என கூறியிருக்கிறார். நான்காவது நன்றி பத்திரிகை, தொலைக்காட்சி, மீடியா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்காம். இறுதி நன்றியை இயக்குனர்கள் செல்வராகவன் மற்றும் வெற்றிமாறனுக்கு தெரிவித்துள்ளார். |
சனி, 31 டிசம்பர், 2011
தனுஷிற்கு பொற்காலமாக அமைந்த 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக