வெள்ளி, 23 டிசம்பர், 2011

வெளிநாடுகளுக்கு பறக்கும் கொலிவுட் பிரபலங்கள்


தமிழ் திரையுலகில் வெளியாகும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகின்றன.
தமிழ் திரையுலகில் கொலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் வெளிநாட்டில் படமாக்கப்படுகின்றன. இந்த படங்களில் நடிக்க கொலிவுட் பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின், ஹன்ஷிகா மொத்வானி இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை ஐரோப்பிய நாடுகளில் படமாக்குகிறார்கள்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாற்றான் திரைப்படத்தை ரஷ்யா மற்றும் அருகில் உள்ள நாடுகளில் படமாக்கியுள்ளார்கள். சமீபத்தில் சூர்யா மற்றும் காஜல் அகர்வாலை கைது செய்வது போன்ற காட்சியை ரஷ்யாவில் படமாக்கினார்கள்.
தல அஜித் நடிக்கும் பில்லா-2, கெளதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படங்களை ஜார்ஜியாவில் படமாக்கியுள்ளார்கள்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, இயக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை அரேபிய நடான ஜோர்டானிலும், லண்டனிலும், அமெரிக்காவிலும் படமாக்கப்படுவதாக கொலிவுட் பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக