செவ்வாய், 27 டிசம்பர், 2011

நடிகர் கலாபவன் மணி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு


மலையாள நடிகர் கலாபவன் மணி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணியின் சொந்த ஊர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியாகும். அங்குள்ள குடப்புழா முருகன் கோவிலில் காவடி திருவிழா நடந்தது. இதில் நடிகர் கலாபவன்மணி கலந்து கொண்டார்.
சாலக்குடி-ஆதிரப்பள்ளி சாலையில் காவடி ஊர்வலம் செல்லும் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி உமேஷ் வாகனங்களுக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார்.
இதற்கு விழா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடிகர் கலாபவன்மணி உமேஷை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது காவல்துறை அதிகாரியை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலாபவன் மணி பிரபலமான மலையாள நடிகர் ஆவார்.
இருப்பினும் ஜெமினி படத்தில் அவர் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் பிரபலமான வில்லனாகவும், நகைச்சுவை கலைஞராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக