![]() |
நடிகை த்ரிஷா புத்தாண்டையொட்டி தோழிகளுடன் சிட்னி செல்கிறார், அவரது காதலரும் தனியே சென்று, புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம். நடிகை ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடவுள்ளார்.![]() நடிகை ஜெனிலியா தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கொலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும், சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட திட்டம் போட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ள நடிகர் சிம்பு அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார். இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் திகதி அவரது மனைவி கீதாஞ்சலி புத்தாண்டை தன் கணவருடன் கொண்டாட ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகர் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார். மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளுடன் வீட்டிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் புத்தாண்டை கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு ஏற்கனவே சென்றுவிட்டார். நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சி. மற்றும் குழந்தைகளுடன் கோலாலம்பூரில் புத்தாண்டைக் கொண்டாடவுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா மற்றும் தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடவுள்ளார். அதே போல் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடவுள்ளார். |
வியாழன், 29 டிசம்பர், 2011
சினிமா நட்சத்திரங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக