வெள்ளி, 16 டிசம்பர், 2011

இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கவில்லை: எமி ஜாக்ஸன்


கொலிவுட்டில் இயக்குனர் விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன்.
இந்தியில் கெளதம் மேனன் இயக்கும் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக் படமான 'ஏக் தீவானா தா' வில் நடித்துள்ளார். இயக்குனர் பாலா தனது படத்தில் எமி ஜாக்ஸன் நடிக்க வைப்பது பற்றி பேசியுள்ளார்.
இது பற்றி எமி ஜாக்ஸன் கூறுகையில் என்னையும் பாலிவுட் ஹீரோ பிரதீக் உடன் இணைத்து கிசுகிசு பரவியுள்ளது. படத்தில் அர்ப்பணிப்போடு நடிக்கும் நடிகர் மட்டுமின்றி எனக்கு நல்ல நண்பர். அவருடன் இணைந்து பணியாற்றும் அனுபவமே மிக சிறப்பானது.
இயக்குனர் விஜய் இயக்கிய 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலமாக நாயகியாக தமிழ் பட உலகில் காலடி வைத்தேன். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா நடித்த ரோலில் நான் இந்தியில் நடித்துள்ளேன்.
இந்தி மொழி தெரியாமலேயே இதில் நடித்தேன். ஆனால் வசனக்காட்சியில் திறமையாக என்னால் நடிக்க முடிந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குனர் விஜய் இயக்கும் 'தாண்டவம்' படத்தில் நாயகன் விக்ரம் உடன் இணைந்து நடிக்கிறேன்.
இயக்குனர் பாலாவின் படத்தின் நடிக்க இருப்பதாக வதந்தி பரவியுள்ளது என்று எமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக