செவ்வாய், 20 டிசம்பர், 2011

படப்பிடிப்பில் கூச்சலிட்ட அமலாபால்


முப்பொழுதும் உன் கற்பனைகள் படப்பிடிப்பில், முதன்முதலாக நடிகை அமலாபால் அதர்வாவுடனான நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது கூச்சலிட்டாராம்.
விண்ணைத்தாண்டி வருவாயா, கோ போன்ற படங்களை தயாரித்த எல்ரெட் குமார், இயக்குனராக அவதரித்திருக்கும் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள்.
இப்படத்தின் கதாநாயகனாக அதர்வாவும் கதாநாயகியாக அமலாபாலும் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.
இயக்குனர்கள் கே.வி.ஆனந்த் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் இப்படத்தின் பாடல்களை வெளியிட்டனர். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் அதர்வா படப்பிடிப்பில் நடந்த அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, “முதல் நாள் படப்பிடிப்பின் போது நடிகை அமலாபாலை நான் சந்தித்தேன். அவருடன் அறிமுகமாகிய சில நிமிடங்களிலேயே அவரை நெருங்கி நடிக்குமாறு இயக்குனர் கூறிவிட்டார். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. முன்பின் பழகாத ஒரு பெண்ணிடம் நெருங்கி நடிக்க சொன்னால் எப்படியிருக்கும்? இருந்தாலும் இயக்குனர் கூறியதை செய்தேன்.
அந்த நேரம் பார்த்து ஹக்க்க்க்க்க்.... என்று கூச்சலிட்டார் அமலா. நான்தான் ஏதோ தவறு செய்துவிட்டேனோ என்று பயந்துவிட்டேன்.
ஆனால் இப்படி நடிக்கும் போதெல்லாம் அமலா கூச்சலிடுவார் என்று அப்புறம் தான் தெரிந்தது. இந்த விஷயத்தை நடிகர் அதர்வா கூறுகையில் அரங்‌கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக