![]() |
கொலவெறி டி பாடல் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் பிரதமர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்கிற அளவுக்கு தனுஷை பிரபலமாக்கியுள்ளது.![]() ஆனால் இந்த அளவிற்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும் தான் காரணம். மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்ததற்கும் எனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இயக்குனர் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்கள் சண்டை போட்டுக்கொண்டதும் உண்டு. இது எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான். அவர் நிச்சயமாக தொடர்ந்து படங்களை இயக்குவார். ஆனால் அவர் இயக்கத்தில் நான் நடித்த முதல் படமும், இறுதி படமும் இதுதான். இனிமேல் அவரது படத்தில் நடிக்க மாட்டேன். மற்ற நிறுவனங்களுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார் என்று கூறியுள்ளார். பொருத்தமான ஜோடி குறித்த கேள்விக்கு தனுஷ் கூறியதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர், கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடிப்பதில் நயன்தாராதான் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார். |
வியாழன், 29 டிசம்பர், 2011
எனக்கு பொருத்தமான ஜோடி நயன்தாரா, ஜெனிலியா தான்: தனுஷ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக