வெள்ளி, 23 டிசம்பர், 2011

நிமிடத்திற்கு 4 லட்சம் சம்பளம் வாங்கும் மல்லிகா


இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்க நிமிடத்திற்கு 4 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய நடன நிகழ்ச்சிகள் களை கட்டும்.
இதனை பயன்படுத்தி நடிகைகள் பணம் சம்பாதித்து கொள்வர். நள்ளிரவு பார்ட்டிக்காக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தின் நடனத்திற்காக நிமிடத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011 டிசம்பர் 31 ம் திகதி இரவு 11 மணிக்கு தொடங்கும் மல்லிகா ஷெராவத்தின் நடன நிகழ்ச்சி அரைமணி நேரம் மட்டுமே நடைபெறவுள்ளது.
இந்த முப்பது நிமிட நடனத்திற்காக 12 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்துள்ளது அந்த தனியார் ஓட்டல் நிர்வாகம். இதுதான் மும்பையில் இப்போது பரவலாக பேசப்படும் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
புத்தாண்டு விருந்துகள் என்றாலே நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவலித்து அவர்களை நடனமாடவைப்பது இப்போது பேஷனாகிவிட்டது என்பதால் கவர்ச்சி நடிகைகளுக்கு அதுவும் மல்லிகா போன்ற நடிகைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக