திங்கள், 19 டிசம்பர், 2011

திருமணத்திற்கு பிறகு நடிக்க விருப்பமில்லை: சினேகா


நடிகர் பிரசன்னாவை ஸ்னேகா திருமணம் செய்து கொள்ள போவாதாக சமிபத்தில் தகவல்கள் வெளியாகின.
இதனை தொடரந்து தற்போது சினேகா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகின்றது.
நடிகர் பிரபுதேவா உடன் காதல் ஏற்பட்ட நயன்தாரா கடைசியாக ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற பக்தி படத்தில் சீதையாக நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகினார்.
அதேபோல தற்போது நடிகர் பிரசன்னாவின் காதல் வலையில் விழுந்துள்ள நடிகை ஸ்னேகா, தெலுங்கில் தயாராகி வரும் ராஜன்னா என்ற புராண படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
ராஜன்னா படத்தில் நாகார்ஜூனா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் புனித கலசம் ஒன்றை ஸ்னேகா தலையில் சுமந்து வருவது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
ஸ்னேகாவின் காதல் திருமணத்துக்கு 2 வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ராஜன்னாவுக்கு பிறகு ஸ்னேகா சினிமாவுக்கு விடை பெற்று கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நயன்தாராவை போல கடைசியாக பக்தி படம் ஒன்றில் நடித்துவிட்டு, சினிமாவுக்கு விடை பெற ஸ்னேகா திட்டமிட்டுள்ளதாகவும் தெலுங்கு திரைப்பட வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக