சனி, 24 டிசம்பர், 2011

ரஜினியுடன் நிச்சயம் நடிப்பேன்: அசின்


நடிகர் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அசின் கூறியுள்ளார்.
இதுபற்றி நடிகை அசின் அளித்த பேட்டியில் கூறியதாவது: சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க கேட்டார்களா? என்கிறார்கள்.
இதுபற்றி அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கேளுங்கள். நான் எதுவும் சொல்வதற்கில்லை. ரஜினியுடன் நடிக்க எனக்கு விருப்பம். வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.
பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷை நான் காதலிப்பதாகவும், அவருடன் ஊர் சுற்றுவதாகவும் நிறைய தகவல்கள் வருகிறது. யாரை பற்றி தான் பாலிவுட்டில் பொய்யான தகவல்கள் வரவில்லை.
அதுபோலத் தான் இதுவும், நான் இதை கண்டுகொள்ளவில்லை. எதையும் ஒளிவு மறைவின்றி பேசிவிடுவேன். நிறைய படங்களில் வாய்ப்பு வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை.
நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது மட்டுமின்றி, கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறதா என்றும் பார்த்தே நடிக்கிறேன். இதுபோன்ற அம்சம் இல்லாததால் நிறைய படங்களை தவிர்த்திருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறேன். மொழி வித்தியாசம் பார்ப்பதில்லை. எனக்கு பிடித்த கதாபாத்திரம் வந்தால் கன்னடத்திலும் நடிப்பேன்.
அக்ஷய் குமார், ஜான் ஆப்ரகாம் உட்பட 22 நடிகர்கள் நடிக்கும் “ஹவுஸ்புல் 2” இந்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக