சனி, 31 டிசம்பர், 2011

பாகன் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்த ஸ்ரீகாந்த்


தமிழ் திரையுலகில் நண்பன் நாயகன் ஸ்ரீகாந்த், பாகன் திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நாயகன் ஸ்ரீகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது முகமது அஸ்லம் இயக்கத்தில் பாகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பாகன் திரைப்படத்தில் அவன் இவன் நாயகி ஜனனி அய்யர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பரோட்டா சூரி, அங்காடி தெரு பாண்டி, கோவை சரளா, ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
கிராமங்களிலிருந்து படித்த இளைஞர்கள் நகரங்களுக்கு வேலைக்காக செல்கின்ற இந்த காலத்தில் கிராமத்திலேயே முன்னேற பாடுபாடும் ஒர் இளைஞரின் கதையே பாகன் திரைப்படமாகும்.
நாயகன் ஸ்ரீகாந்த் பாகன் திரைப்படத்திற்காக தன் உடல் எடையில் 13 கிலோவை குறைத்துள்ளார். அறிமுக திரைப்படமான ரோஜாக்கூட்டத்தில் காணப்பட்ட தோற்றத்தில் இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.




http://www.myfuncards.com/dl/index.jhtml?theme=print&spu=true&partner=ZUxdm864&sub_id=ZUxdm864

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக