![]() |
சமீபத்தில் நடந்த முகமூடி பட தொடக்க விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசினார்.![]() இரு வருடங்களுக்கு முன் மிஸ்கின் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிய அஞ்சாதே படத்தில் பொலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத்தான் அழைத்தார். நான் அதை ஏற்கவில்லை. சரியாக மீசைகூட முளைக்கவில்லை. நான் எப்படி பொலீஸ் வேடத்தில் நடிப்பது? அதற்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்று கூறி விட்டேன் என்றார். இதற்கிடையே சமீபத்தில் வெளியான “ஒஸ்தி” படத்தில் நடிகர் சிம்பு பொலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். அவரைத்தான் ஜீவா தாக்கி பேசியதாக அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே “கோ” படம் தொடர்பாக சிம்பு ரசிகர்கள் ஜீவாவையும், ஜீவா ரசிகர்கள் சிம்புவையும் கண்டித்து கருத்துக்களை தெரிவித்தது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரு நட்சத்திரங்களுக்குள்ளும் இலைமறைக்காயாக நடந்து வரும் பனிப்போரின் அடுத்த கட்டமாக ஜீவா பேசியிருப்பது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. |
செவ்வாய், 20 டிசம்பர், 2011
மீசை முளைக்காததால் நடிக்கவில்லை: ஜீவா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக