வியாழன், 29 டிசம்பர், 2011

நடிகை மம்தா மோகன்தாஸின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது


நடிகை மம்தா மோகன்தாஸ், பிரஜித் பத்மநாபன் திருமணம் நேற்று(28.12.2011)  கோழிக்கோட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவப்பதிகாரம், குரு என் ஆளு போன்ற தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.
இவர் 30-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது தடையறத் தாக்க என்ற தமிழ் படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மம்தாவின் திருமணம் நேற்று கோழிகோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இவர் தனது தோழனான பிரஜித் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரஜித் பஹ்ரெய்னில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்கு மம்தாவின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக