![]() |
![]() ஆனால் சமீபத்திய காலமாக தியேட்டர்களில் மக்களின் கூட்டம் குறைத்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேர காட்சிக்கு ஆட்களே வருவதில்லை. இரவு காட்சி முடியும்போது நள்ளிரவு ஆகிவிடுவதால், அந்த காட்சிக்கு வருவதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை கருதி, இரவு காட்சிக்கு வருவதில்லை. இப்போது பனிக்காலமாக இருப்பதால், இரவில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்கிறார்கள். இதனால் தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நிரந்தரமாக இரவு காட்சியை ரத்து செய்வது பற்றியும் தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி பெங்களூரை போன்று காலை காட்சியை 11மணிக்கும், பகல் காட்சியை 2மணிக்கும், மாலை காட்சியை 4மணிக்கும், இரவு காட்சியை 7மணிக்கும் நடத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. |
செவ்வாய், 20 டிசம்பர், 2011
இரவு காட்சியை ரத்து செய்ய தியேட்டர் அதிபர்கள் முடிவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக