சனி, 17 டிசம்பர், 2011

திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய செங்கடல் திரைப்படம்


தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொல்லும் அவலத்தையும் இலங்கை முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை படும் கொடுமைகளையும் பார்த்திருப்போம்.
அவர்களின் அவளங்களை மையமாக கொண்டு லீணா மணிமேகலையால் இயக்கிய‌ எடுக்கப்பட்ட படம் செங்கடல். பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு பிறகு செங்கடல் படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்தது.

செங்கடல் திரைப்படம் டோக்கியோ, டர்பன், மொன்றியல், மும்பை, டொரண்டோ, கேன்ஸ் மற்றும் இந்தியன் பனோரமா சார்பாக கோவா பட விழாவிலும் திரையிடப்பட்டது. சென்னை திரைப்படவிழாவில் பல தமிழ் படங்கள் திரையிடப்படுகிறது ஆனால் செங்க்டல் திரையிடப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரைப்படவிழா துவக்கம் நடந்துகொண்டிருந்த போது திடீரென இருக்கைகளிலிருந்து எழுந்து இயக்குனர் லீணா மணிமேகலை, எடிட்டர் லெனின், இயக்குனர் மாமல்லன் கார்த்திக், வெளி ரங்கராஜன் ஆகியோர் கையில் பலகைகள் உடன் திரையிடு திரையிடு செங்கடல் படத்தை திரையிடு என முழக்கம் எழுப்ப ஆரம்பித்தனர்.

இதனால் திரைப்படவிழாவின் துவக்கத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு சரத்குமார் போராட்டக்காரர்களுடன் பேசி பிரச்சனையை அப்போதைக்கு முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக