![]() |
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு.![]() நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் வடிவேலு அவர் கூறியதாவது, நீண்டநாட்களுக்கு பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். மற்றபடி யாருக்கும் பயந்து இந்த முடிவை எடுக்கவில்லை. மதுரையில் பிறந்துவிட்டு இப்படி சீரழிகிறாயே என்று பலரும் கேட்டனர். சினிமா படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து சிரிக்க வைத்தாலும் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அமைதியாக இருந்த என்னை சிலர் சீண்டிவிட்டனர். வடிவேலு கொலை செய்தான் என்றும், கொள்ளையடித்தான் என்றும் வீணாக அவதூறு பரப்புகிறார்கள். இந்த எல்லா பிரச்சனையும் சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்றார். |
புதன், 21 டிசம்பர், 2011
நடிக்காததற்கு சூழ்நிலை தான் காரணம்: வடிவேலு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக