செவ்வாய், 20 டிசம்பர், 2011

நட்சத்திர ஓட்டல் கட்டுகிறார் த்ரிஷா


நடிகை த்ரிஷா தனது அப்பாவிற்காக ஐதராபாத்தில் அதிக பொருட்செலவில்  நட்சத்திர ஓட்டல் ஒன்று கட்டி வருகிறாராம்.
த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் சென்னையில் பென்ஸ் பார்க் உள்ளிட்ட பல நட்சத்திர ஓட்டல்களில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்
.தற்போது அவர் கேரளாவில் இருக்கும் ஒரு ஓட்டலில் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் தாயைப் பிரிந்து இருக்கும் தந்தையை மீண்டும் குடும்பத்தில் சேர்க்கும் முயற்சியில் த்ரிஷா ஸ்டார் ஓட்டலை கட்டி அதில் தந்தையை முதன்மை நிர்வாகியாக்க போவதாகக் கூறப்படுகிறது.
அப்பாவை பிரிந்து இருந்தாலும், த்ரிஷாவுக்கு அவரது அப்பா மீது எப்பவுமே ஒரு பாசம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அபியும் நானும் என்ற திரைப்படத்தில் அப்பா பிள்ளையாக நடித்த த்ரிஷா நிஜத்திலும் அப்பா மீது அவ்வளவு பாசம் கொண்டவராம். ஏனோ விதி சதி செய்ய குடும்பத்தில் விரிசல். அதற்கு விலை தான் இந்த நட்சத்திர ஓட்டல்.
பிரிந்த குடும்பத்தை இந்த ஓட்டல் ஒன்று சேர்க்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக