வியாழன், 15 டிசம்பர், 2011

சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு செல்லும் ஏழாம் அறிவு


தமிழ் திரையுலகில் சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு திரைப்படத்தை சர்வதேச விழாக்களுக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஏற்று நடித்த போதிதர்மன் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஏழாம் அறிவு திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. தற்போது இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்கள்.
இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், சர்வதேச திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைப்படத்தில் உள்ள தேவையற்ற காட்சிகளையும், பாடல்களையும் நீக்கி விட்டு அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக