![]() |
நடிகர் வெங்கடேஷ், மகேஷ்பாபு அண்ணன் தம்பியாக நடிக்கும் தெலுங்கு படம் “சீதம்மா வகிட்லோ ஸ்ரீமலே செட்டு”. இதில் மகேஷ்பாபு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வெங்கடேஷுக்கு மனைவியாக நடிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடிப்பது பற்றி யோசிக்க வேண்டும். அது கதாநாயகி இமேஜை பாதிக்கும் என்று பல நடிகைகள் கூறினர். எல்லா நடிகைகளும் பின்வாங்கியதால், கடைசியில் தயக்கத்துடன் அனுஷ்காவை கேட்டனர். அவர் உடனே ஓகே சொன்னார். இதையடுத்து தயாரிப்பாளர் ராஜு அவரை ஒப்பந்தம் செய்தார். விசாகப்பட்டினத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை(15.12.2011) தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் பல லட்சம் செலவில் செய்யப்பட்டன. வெங்கடேஷ், மகேஷ்பாபு, சமந்தா கால்ஷீட் கொடுத்துவிட்டனர். அனுஷ்கா இன்னும் கொடுக்கவில்லை. இதனால் இயக்குனர் ஸ்ரீகாந்தும், படக்குழுவில் உள்ள மற்றவர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். அனுஷ்கா ஒப்புக்கொண்டதால் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் இழுத்தடிக்கிறார். அவரது கால்ஷீட் கிடைக்காவிட்டால் படப்பிடிப்பை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை என்கிறது பட வட்டாரம். |
வியாழன், 15 டிசம்பர், 2011
அண்ணியாக நடிக்க ஒப்புக்கொண்ட அனுஷ்கா திடீரென பின்வாங்கியதால் குழப்பம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக