![]() |
திருமணத்தை நான்கு நாள் விழாவாக ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். துஜே மேரி கஸம் என்ற படத்தில் ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் சேர்ந்து நடித்தனர்.![]() ரித்தேஷின் அப்பா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் ஆவார். இருந்தும் தங்களது காதலில் இருவரும் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து, இந்த காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரித்தேஷ். விரைவில் தனக்கும், ஜெனிலியாவுக்கும் திருமணம் நடக்கும் என்று கூறியவர் திருமண தேதியை வெளியிடவில்லை. இப்போது பிப்ரவரி 5-ம் திகதி திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிதேஷின் தந்தை விலாஸ்ராவ் தேஷ்முக் அரசியல்வாதி என்பதால் இந்த திருமணத்தை ஆடம்பரமாக நடத்த உள்ளனர். அதன்படி பிப்ரவரி 3ம் திகதி தொடங்கும் திருமண நிகழ்ச்சி 6ம் திகதி வரை நான்கு நாள் நடக்க இருக்கிறது. 3,4 தேதிகளில் மெகந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சிகளும், 5ம் திகதி திருமணமும், 6ம் திகதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த திருமணத்திற்கு பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட உள்ளனர். திருமணத்திற்கு முன்பாக கைவசம் உள்ள படங்களை முடிக்க ஜெனிலியாவும், ரிதேஷூம் தீவிரமாக உள்ளனர். திருமணத்துக்கு பின், ஜெனிலியா நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. |
வியாழன், 15 டிசம்பர், 2011
விழாவாக நடக்குவிருக்கும் ஜெனிலியா-ரித்தேஷ் ஜோடி திருமணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக