செவ்வாய், 13 டிசம்பர், 2011

Why This Kolaiveri ஹிட் இல்லை கேடு: குட்டி ரேவதி


தனுஷின் கொலவெறிடி பாடலுக்கு கவிஞர் குட்டி ரேவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த பாடலெல்லாம் ஹிட் இல்லை கேடு என்று அவர் கூறியிருக்கிறார்.
ரேட்டிங் விஷயத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கொலவெறிடி பாடலை பலரும் பாராட்டி வரும் வேளையில், ஒருசிலர் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பாடல் குறித்து கவிஞர் குட்டிரேவதி அளித்துள்ள பேட்டியில், பொதுவாக இதுபோன்ற பாடல்கள் எல்லாம் ஆண்களின் வயலன்ட்டான உளவியல் எண்ணத்தைதான் பிரதிபலிக்கிறது.
அந்த வன்முறையை விளம்பரப்படுத்தி, பிரபலப்படுத்தி மக்களை ரசிக்க வைக்கிற தந்திரம் மிகவும் ஆபத்தானது.
அடி டா அவள... , கொலைவெறி டி... என்று பாடுற பாட்டு, ஒரு பள்ளி சிறுவனிடம், பெண்களை மதிக்கணுங்கிற முக்கியமான வேல்யூவை எப்படி வளர்க்கும்? இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் இல்ல, கேடு., என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக