செவ்வாய், 13 டிசம்பர், 2011

நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு: நகுல் மகிழ்ச்சி


தமிழ் திரையுலகில் ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் போது பதட்டமாக இருந்தது என, நாயகன் நகுல் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களுல் ஒருவரான வெற்றிமாறனின் உதவியாளரான பிருத்வி ராஜ்குமார், நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தை இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் நகுல் நாயகனாகவும், சாந்தினி மற்றும் அவினி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். நேற்று(12.12.2011) நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தின் முதல்காட்சியை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
மேலும் நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் பணியாற்றுகிறார்.
இந்தப்படத்தின் முதல் காட்சியை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கினார். அவருடைய இயக்கத்தில் நடித்ததை நினைத்தால் மிகவும் பதட்டமாக இருந்தது. சுப்பர் ஸ்டாரின் பிறந்த திகதியன்று சிங்கபெருமாள் கோவிலில் படப்பிடிப்பை துவக்கினோம் என்று நகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக