தமிழ் திரையுலகில் பூ, களவாணி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் பின்பு தேநீர் வீடுதி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் திருமாவளவன் இயக்கியுள்ள வெண்மணி திரைப்படத்திற்கான சினிமா விமர்சனம் படித்தேன். அதில், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் என்று குறிப்பிட்டிருந்ததுடன், இசையும் சுமாராக இருந்தது என்று எழுதப்பட்டிருந்தது.பத்திரிக்கையில் தவறுதலாக எனது பெயரை பயன்படுத்தியிருக்கிறார்களோ என்ற அச்சத்தில் வெண்மணி திரைப்படத்தின் விளம்பரத்தை பார்த்தவுடன் மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் விளம்பரத்திலும் எனது பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் பணியாற்றாத திரைப்படம் ஒன்றில் எனது பெயரை பயன்படுத்தியிருப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளேன். மேலும் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதும் பத்திரிக்கை அன்பர்கள் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார். |
செவ்வாய், 13 டிசம்பர், 2011
எனது பெயரை பயன்படுத்தாதீர்கள்: இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் திருமாவளவன் இயக்கியுள்ள வெண்மணி திரைப்படத்திற்கான சினிமா விமர்சனம் படித்தேன். அதில், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் என்று குறிப்பிட்டிருந்ததுடன், இசையும் சுமாராக இருந்தது என்று எழுதப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக