செவ்வாய், 13 டிசம்பர், 2011

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் அஞ்சலி


தமிழ் திரையுலகில் நாயகி அஞ்சலி கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.
தமிழ் திரையுலகில் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படங்களின் வெற்றிக் கதாநாயகி அஞ்சலி கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு மட்டுமே சம்மதிக்கிறார்.
இதற்கு முன்பு நாயகன் விஷால் நடிப்பில் இயக்குனர் திரு இயக்கும் சமரன் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க அஞ்சலியை அணுகியுள்ளார்கள்.
ஆனால் அந்த வாய்ப்பை அஞ்சலி மறுத்த விட்ட பின்பு தற்பொழுது நாயகி சுனைனா சமரன் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆதி, இயக்குனர் சேரன் நடிக்கும் திரைப்படங்களில் நடிக்க அஞ்சலியை தேடி வாய்ப்புகள் வந்துள்ளன.
அந்த வாய்ப்புகளையும் அஞ்சலி தவிர்த்துள்ளார். ஆனால் சீயான் விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுல் ஒருவராக, பண்டைய காலத்து தமிழ் பெண்ணாக அஞ்சலி நடிக்க உள்ளார். ஏனென்றால் இதில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கும் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக