திங்கள், 12 டிசம்பர், 2011

ரன்பீர் கபூரை இயக்கும் கே.வி.ஆனந்த்


ஷங்கர், மணிரத்னம் உட்பட முன்னணி இயக்குநர்களுக்கு ஒளிப்பதிவாளராக பயணத்தைத் தொடங்கி பிறகு பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் சினிமா ஆட்டோகிராபராக உயர்ந்தவர் கே.வி.ஆனந்த்.
அதன் பிறகு தமிழில் இயக்குநராக முத்திரை பதிக்க ஆரம்பித்தார்.
'அயன்', 'கோ' என்று அடுத்தடுத்து பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து விட்டு, அதிகம் பேசாமல் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
தற்போது 'மாற்றான்' படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவை இயக்கி வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டின் இளம் ஹீரோ ரன்பீர் கபூர் கே.வி. ஆனந்தின் 'கோ' படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, சென்னையில் வந்து பிரிவியூ காட்சி மூலம் படத்தைப் பார்த்து விட்டு, உங்கள் இயக்கத்தில் நடிக்கத் தயார் என்று இயக்குநரிடம் சொன்னாராம்.
அவரது ஆர்வத்தை மதிக்கும் இயக்குநர், 'மாற்றான்' படத்தை முடித்து விட்டு ரன்பீர் கபூரை ஹிந்தியில் இயக்க இருக்கிறாராம் கே.வி ஆனந்த்.
'கோ' படத்தை தயாரித்த ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்க முன்வந்திருகிறது.
ரன்பீர் கபூர் நடிக்க இருப்பது 'கோ' படத்தின் ஹிந்தி ரீமேக்கா அல்லது புதிய கதையா என்பதை விரைவில் கே.வி.ஆனந்த் உறுதிப்படுத்துவார் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக