திங்கள், 12 டிசம்பர், 2011

விக்ரம் எப்போதும் யூத் ஃபுல் தான்: ரீமா சென்


நடிகர் விக்ரமை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று நடிகை ரீமா சென் கூறியுள்ளார்.
ராஜபாட்டை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தின் கதாநாயகிகளான தீக்ஷா சேத், ரீமாசென் இருவருமே பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர், ரீமாசென்னிடம், ‘நீங்க விக்ரமுடன் தூள் படத்தில் நடிச்சிருக்கீங்க. அந்த படம் வெளிவந்து பத்து வருஷமாவது இருக்கும். இப்போ ராஜபாட்டையில் மறுபடியும் சேர்ந்து நடிக்கிறீங்க. சீயான் விக்ரம் சார் பற்றி சொல்லுங்க? என்று கேட்டு மைக்கை நீட்டினார்.
அப்போது சீரியசாக பேச ஆரம்பித்த ரீமாசென், நான் பொறாமைப்படுவது சீயான் விக்ரமின் மாறாத யூத் ஃபுல் தோற்றத்தை பார்த்துதான்.
அப்ப பார்த்த மாதிரி இப்பவும் அப்படியே இருக்கார், என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய நடிகை தீக்ஷா சேத், அடுத்த முறை கட்டாயம் தமிழில் பேசுவேன், என்று வாக்குறுதி அளித்தார் என்பது கூடுதல் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக