திங்கள், 12 டிசம்பர், 2011

ஏ.ஆர் ரஹ்மான் தான் எனது இன்ஸ்பிரேஷன்: அனிருத்


ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு பரபரப்பு, வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு வரலாறு கூட படைக்க முடியும் என்ற அளவுக்கு வெற்றி கண்டுள்ளது மூன்று படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல்.
பிளாப் சாங் என்று ஆரம்பித்தாலும் இன்றளவில் உலக மெகா ஹிட்டாகி உள்ளது கொலவெறி பாடல்.
கொலிவுட்டில் காலடி எடுத்த வைத்த மாத்திரத்தில் அனிருத்துக்குத் தான் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
யூ டியூபில் அதிகம் தேடப்பட்டபாடல் என்ற வரிசையில் ஒய் திஸ் கொலவெறிக்கு கேல்ட் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, தனுஷ் எழுதி பாடிய இந்த பாடல் பற்றி டைம் பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளது.
இது மூன்று டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார் அனிருத். இப்படி ஒரு இமாலய வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இது எங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மானை மிஞ்சிவிட்டீர்கள் போல என்றால் அப்படி ஒன்றும் இல்லை ஏ.ஆர் ரஹ்மான் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு மிகப்பெரிய கலைஞர், நான் இப்போது தான் என் இசைப்பயணத்தை துவக்கியுள்ளேன்.
ரஹ்மான் சார் சாதித்ததில் ஒரு 5% அளவுக்கு சாதிக்க முடிந்தாலே அதை மிகப்பெரிய சாதனையாக கருதுவேன் எள்று அனிருத் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக