![]() |
விக்ரம், ஐஸ்வர்யாராய் நடித்த ராவணன் படத்தையடுத்து மணிரத்னம் புதிய படம் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக் மகன் கவுதமை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.![]() சில நாட்களுக்கு முன்பு கவுதம், துளசி இருவரையும் ரகசிய இடத்துக்கு வரவழைத்த மணிரத்னம் விதவிதமான காஸ்டியூம்களில் பல்வேறு விதமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்தார். பின்னர் இருவருக்கும் ‘டெஸ்ட் ஷூட்’ எனப்படும் நடிப்பு ஒத்திகை நடத்தி வீடியோவில் பதிவு செய்தார். இதில் திருப்தி அடைந்த மணிரத்னம் படத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். கவுதம், துளசி இருவரின் புகைப்படங்களை மீடியாக்களில் வெளியிட விரும்பாத மணிரத்னம் ஷூட்டிங் முடியும் வரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ககூடாது என்று இருவருக்கும் நிபந்தனை விதித்திருக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். |
திங்கள், 12 டிசம்பர், 2011
புதுமுக ஜோடிக்கு நிபந்தனை போட்ட மணிரத்னம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக