![]() |
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் ஆதிபகவன். இதன் படபிடிப்பு தொடங்கி ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிறது.![]() இதையடுத்து ஆதிபகவன் படத்தை விரைந்து முடித்துவிட்டு தன் படபிடிப்பிற்கு வரும்படி அமீரிடம் பாரதிராஜா கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ஆதிபகவன் பட வேலை பற்றி ஜெயம் ரவி அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒன்றரை மாதத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆதிபகவன் பட வேலைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இது அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடக்கூடிய படம் அல்ல என்பது பின்னர் புரிந்தது. வெயிட்டான கதாபாத்திரம். இருவித கெட்டப்பில் வருகிறேன். தாய்லாந்தில் படபிடிப்பு நடத்தவேண்டி இருந்தது. அங்கு படபிடிப்பு நீண்ட நாட்கள் நீடித்தது. உடற்கட்டு ஏற்றி பலமுள்ளவனாக தோன்ற வேண்டி இருந்தது. அதற்காக எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. படம் தாமதமாவதற்கு இதுதான் முக்கிய காரணம். இந்த படத்தின் கதை, என் கதாபாத்திரம் பற்றி கேட்கிறார்கள். இதுவரை அமீர் அதை வெளியில் சொல்லவில்லை. நானும் சொல்லமாட்டேன். இயக்குனர்தான் கூறுவார். இந்த படத்துக்காக இயக்குனரும், நானும் அதிகபட்சமாக உழைத்திருக்கிறோம். இப்படத்தின் இறுதிகட்ட பணி நடக்கிறது. இது முடிந்த பிறகு பூலோகம் படத்தில் நடிக்க உள்ளேன் என்று கூறினார். |
திங்கள், 12 டிசம்பர், 2011
ஆதிபகவன் தாமதம் குறித்து ஜெயம்ரவி விளக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக